(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் வெற்றிநடை போட்டுவந்த முன்னாள் உலக சம்பியன் இலங்கை, தனது உலகக் கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் குறிக்கோளுடன் சுப்பர் 6 சுற்றின் 2ஆவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டி புலாவாயோ ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தனது குழுவிலிருந்து சுப்பர் 6க்கு முன்னேறிய ஸ்கொட்லாந்து, ஓமான் ஆகிய அணிகளை வெற்றிகொண்டதன் மூலம் 4 புள்ளிகளுடன் சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்துள்ள இலங்கைக்கு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற இன்னும் 2 வெற்றிகளே தேவைப்படுகிறது.
அந்த இரண்டில் ஒரு வெற்றியை இன்றைய போட்டியில் சுவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை களம் இறங்கவுள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இதற்கு முன்னர் நெதர்லாந்தை 3 தடவைகள் சந்தித்துள்ள இலங்கை அவை அனைத்திலும் முறையே 55 ஓட்டங்களாலும், 155 ஓட்டங்களாலும் 206 ஓட்டங்களாலும் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
இந்த இரண்டு அணிகளும் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கடைசியாக 2016இல் ஒன்றையொன்று எதிர்த்தாடி இருந்தன.
உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சகலதுறைகளிலும் மிகச் சிறப்பாக பிரகாசித்து 4 போட்டிகளிலும் இலகுவான வெற்றிகளை ஈட்டிய இலங்கை இன்றைய போட்டியிலும் வெற்றிபெறுவதற்கு சாதகமான அணியாகத் தென்படுகிறது.
எவ்வாறாயினும் இரண்டு தடவைகள் (1975, 1979) உலக சம்பியான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தகுதிகாண் சுற்றில் சரிசமமாக விளையாடி சுப்பர் ஓவரில் வெற்றியீட்டிய நெதர்லாந்தை வெற்றிகொள்வது இலங்கைக்கு இலகுவாக அமையும் என்று கூறமுடியாது. அத்துடன் இலங்கை அணியில் போன்றே நெதர்லாந்து அணியிலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
எனவே இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு இலங்கையின் முன்வரிசை வீரர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடும் அதேவேளை பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை தொடரவேண்டும்.
அடுத்த போட்டியில் வரவேற்பு நாடான ஸிம்பாப்வேயை உற்சாகத்துடன் எதிர்கொள்ளும் வகையில் இன்றைய போட்டியில் அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தி இலங்கை வெற்றியை உறுதிசெய்யும் என நம்பப்படுகிறது.
தகுதிகாண் சுற்றில் விளையாடாமல் இருந்து பயிற்சியின்போது உபாதைக்குள்ளான துஷ்மன்த சமீரவுக்குப் பதிலாக தயார்நிலை வீரர்களில் ஒருவராக ஸிம்பாப்வேக்கு அனுப்பபப்ட்ட டில்டில்ஷான் மதுஷன்கவை அணியி ல் இணைத்துக்கொள்ள இலங்கைக்கு ஐசிசி தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது உறுதியில்லை.
இதேவேளை, தகுதிகாண் சுற்றில் துடுப்பாட்டத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய திமுத் கருணாரட்ன (ஒரு சதம, 2 அரைச் சதங்கள் உட்பட 233 ஓட்டங்கள்) மற்றும் பெத்தும் நிஸ்ஸன்க (189), சதீர சமரவிக்ரம (181), சரித் அசலன்க (149) ஆகியோர் சுப்பர் 6 சுற்றிலும் அசத்துவர் என நம்பப்படுகிறது.
வனிந்து ஹசரங்க (18 விக்கெட்கள்), லஹிரு குமார (6), மஹீஷ் தீக்ஷன (6) ஆகியோர் தொடர்ந்தும் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்டு நெதர்லாந்து துடுப்பாட்ட வீரர்களைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.
நெதர்லாந்து அணியில் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (217 ஓட்டங்கள்), மெக்ஸ் ஓ'டவ்ட் (211), டேஜா நிடாமனுரு (163) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் டி லீட் (7 விக்கெட்கள்), வென் பீக் (6 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் கடைசி தகுதிகாண் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டதன் மூலம் உற்சாகம் அடைந்துள்ள நெதர்லாந்து இன்றைய போட்டியில் இலங்கைக்கு சவால் விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அணிகள்:
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த, லஹிரு குமார
நெதர்லாந்து: ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர), மெக்ஸ் ஓ'டவ்ட், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பரெசி, டேஜா நிடாமனுரு, பாஸ் டி லீட், சக்கிப் ஸுல்பிகார், விவியன் கிங்மா, ஆரியன் டட், லோகன் வென் பீக், க்லேட்டன் ப்ளொய்ட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM