வத்தளை, ஹுணுப்பிட்டி பகுதியில் உள்ள பொலிதீன் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவலுக்கான காரணம் வெளியாகியாகியுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் அங்குள்ள குப்பைக்கிடங்குக்கு தீ வைத்த போது தீ தொழிற்சாலைக்குள் பரவியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த தீ பரவலினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.