அமீர் நடிக்கும் 'மாயவலை' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

30 Jun, 2023 | 09:45 AM
image

இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'மாயவலை' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குந‌ர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மாய வலை'. இதில் அமீர், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, 'வட சென்னை' சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அமீர் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை .யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் வழங்குகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும்,, தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அமீரின் பாதி முகமும், அவரின் பின்னணியில் ஒரு இளம் காதலர்களின் காதல்  இடம் பிடித்திருப்பதாலும்,. இவை வண்ணமின்றி வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் பார்வையாளர்கள் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்