61 வருடமாக இலவசமருத்துவம் செய்துவந்த  91 வயது பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் சிறந்த சேவை புரியும் குடிமக்களுக்கான பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில்  91 வயது பெண் டாக்டர் பக்தி யாதவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தி யாதவ், மத்திய பிரதேசமாநிலத்திலுள்ள இந்தூரைச் சேர்ந்த அவர், தான் வசிக்கும் பகுதியில் 68 ஆண்டுகளாக இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளார். 

91 வயதாகும் நிலையிலும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் இருக்கும் இவர் இலவச சிகிச்சையை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

யாதவின் சேவையை பாராட்டி இந்திய மத்திய அரசு குறித்த உயரிய விருதை அளித்துள்ளது. இதன் மூலம் பத்மஸ்ரீவிருது பெறும் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையையும் யாதவ் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.