குதி உயர்ந்த (ஹை ஹீல்ஸ்) பாதணி அணிந்துகொண்டு 100 மீற்றர் தூரம் ஓடும் போட்டியில் ஸ்பெய்னைச் சேர்ந்த ஆண் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கிறிஸ்டியன் ரொபர்ட்டோ லோபஸ் ரொட்ரிகஸ் என்பவரே இச்சாதனையை படைத்துள்ளார்.
இவர் 2.76 அங்குலம் உயரமான ஹை ஹீல்ஸ் பாதணிகளை அணிந்த நிலையில் 100 மீற்றர் தூரத்தை 12.82 விநாடிகளில் ஓடி முடித்தார்.
ஜேர்மனியைச் சேர்ந்த அன்ட்ரே ஓர்டோல்வ் 2019 ஆம் ஆண்டில் 14.02 விநாடிகளில் ஓடியமையே, ஹை ஹீல்ஸ் ஓட்டத்தில் இதுவரை சாதனையாக இருந்தது.
ஜமைக்கா வீரர் யூசைன் போல்ட் 100 மீற்றர் ஓட்டத்தை 9.58 ஓடியமையே உலக சாதனையாக உள்ளது. இந்த சாதனை நேரத்தைவிட 3.02 விநாடிகளே யூசைன் போல்ட் மெதுவாக ஓடியுள்ளார்.
ஏற்கெனவே பல்வேறு கின்னஸ் சாதனைகளைப் படைத்தவர் ரொட்ரிகஸ். எனினும், குதி உயர்ந்த பாதணியுடன் வேகமாக ஓடுவதற்கு தயாராகுவது சவாலானதாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM