ஆலய வழிபாட்டு பரிகாரத்தில் இடம் பிடிக்கும் அபிஷேகங்கள்...!

29 Jun, 2023 | 02:59 PM
image

எம்மில் சிலருக்கு அவர்களுடைய வாழ்வில் வெற்றி பெற சோதிட நிபுணர்கள் ஆலய வழிபாட்டு பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக இறைவனுக்கு அபிஷேகங்களை செய்வதன் மூலம் உங்களது கர்ம வினைகள் குறைந்து பலன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருப்பர்.

இவர்கள் தங்களது வாழ்நாளில் சோதிடர் குறிப்பிட்ட திகதியில் அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு கீழ்க்கண்ட அபிஷேகங்களை செய்தால்நினைத்த காரியங்கள் அல்லது தடையினால் பாதிக்கப்பட்டிருக்கும் காரியங்களில் நன்மை கிட்டும். உடனே எம்மில் சிலர்,'எம்முடைய சோதிடர் முருகப் பெருமான், விநாயகப் பெருமான், நவகிரகங்கள் காளி, துர்க்கை.. ஆகியோர்களுக்குத்தான் அபிஷேகம் செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நீங்கள் சிவனுக்கு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே..!' என சந்தேகத்துடன் கேட்பர். உங்கள் ஜோதிடர் கூறிய விக்கிரகங்களுக்கு அபிஷேகம்  செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சிவனுக்கும் கூடுதலாக செய்வது தான் தனித்துவமானது.

ஏனெனில் சிவனுக்கு என்னென்ன பொருட்களைக் கொண்டு.. அபிஷேகம் செய்தால்.. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என எம்முடைய சோதிட நிபுணர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் ஒரு நீண்ட பட்டியலையே வெளியிட்டிருக்கிறார்கள்.

நீங்கள் நீண்ட ஆயுளை பெற விரும்பினால், இறைவனுக்கு பசும்பாலில் அபிஷேகம் செய்யுங்கள்.

உங்களுடைய உடலும் உள்ளமும் வலிமை பெற்று திகழ வேண்டும் என விரும்பினால், இறைவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யுங்கள்.

நினைத்த காரியம் நினைத்த வண்ணம் நிறைவேற வேண்டும் என்றால், இறைவனுக்கு வலம்புரி சங்கு மூலம் அபிஷேகம் செய்யுங்கள்.

வியாபாரத்தில் நஷ்டமே இல்லாமல் எதிர்பார்த்த கூடுதல் லாபம் கிடைக்க வேண்டும் என்றால், இறைவனுக்கு கனகாபிஷேகம் எனப்படும் தங்க காசுகளைக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.

நாம் மட்டுமல்லாமல் எம்முடைய குடும்ப உறுப்பினர்களும் சுபிட்சமாகவும், சுகத்துடனும் திகழ வேண்டும் என விரும்பினால், இறைவனுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யுங்கள்.

எம்முடைய இல்லத்தில் தனலட்சுமி தாராளமாக தங்கி விட வேண்டும் என்று விரும்பினால், இறைவனுக்கு பன்னீரையும், சந்தனத்தையும் கலந்து அபிஷேகம் செய்யுங்கள்.

தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்நோய் குணமடைய இறைவனுக்கு கரும்பு சாறு மூலம் அபிஷேகம் செய்யுங்கள்.

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க, இறைவனுக்கு திருமஞ்சன பொடியால் அபிஷேகம் செய்யுங்கள்.

பாடகியாக வேண்டும் என்று விரும்பினாலோ அல்லது மேடையில் ஏறி கணீரென்று குரலில் பேசி கூட்டத்தினரை வசீகரிக்க வேண்டும் என்று விரும்பினாலோ அல்லது எப்போது யாரிடம் பேசினாலும் தெளிவாகவும், இனிமையாகவும் பேச வேண்டும் என்று விரும்பினாலும் இறைவனுக்கு சுத்தமான தேன் மூலம் அபிஷேகம் செய்யுங்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மக்கட்பேறு பெறுவதற்கு இறைவனுக்கு தயிரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

எந்த அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் அல்லது அனைத்து அபிஷேகங்களையும் ஒருங்கிணைந்து செய்ய விரும்பினாலும், உங்களது உள்ளமும் உடலும் ஒரு முகமாக மாறி.. பிரார்த்தனை செய்தால், உங்களது எண்ணத்தை இறைவன் ஈடேற்றுவார்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17