அருள்நிதி நடிக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு

Published By: Nanthini

29 Jun, 2023 | 02:59 PM
image

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிமான்ட்டி காலனி 2'. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.  

ஹொரர், த்ரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி, 61 நாட்களில் நிறைவடைந்திருக்கிறது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். 'டிமான்ட்டி காலனி 2' படத்துக்கான வெளியீட்டுத் திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right