இந்தியாவில், 106 வயது மூதாட்டி ஒருவர் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று, சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரியில் உள்ள கத்மா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாய். 106 வயதான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது 104 வயதில் தடகளப் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு, 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி டேராடூனில் நடைபெற்ற 18வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட ராம்பாய், 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கம், 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கம், குண்டு எறிதலில் ஒரு தங்கம் என மொத்தம் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
மூதாட்டி ராம்பாய் இதுவரை இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடைபெற்ற சுமார் 14 விளையாட்டுப் போட்டி தொடர்களில் பங்கேற்று, 200 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM