தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரமாக திகழும் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங் ஆப் கோதா' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிங் ஆப் கோதா'. அபிலாஷ் என். சந்திரன் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, 'டான்சிங் ரோஸ்' சபீர், பிரசன்னா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, 'வடசென்னை' சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோ சவுத் என்ற நிறுவனத்துடன் வேஃபரர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.
ஓணம் பண்டிகை தினத்தன்று தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது இதில் துல்கர் சல்மானின் எக்சன் காட்சிகள் அதிரடியாக இடம் பிடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM