குணச்சித்திர நடிகரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆர் யூ ஓகே பேபி' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி', 'ஹவுஸ் ஓனர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆர் யூ ஓகே பேபி'. இதில் சமுத்திரக்கனி, அபிராமி, முருகா அசோக், மிஷ்கின், பவல் நவகீதன், ரோபோ சங்கர், வினோதினி , இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டி. எஸ். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கலவையான ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப் மற்றும் டி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் சமுத்திரக்கனி- அபிராமி ஆகியோரின் மகிழ்ச்சியான தோற்றமும், அவர்களது கைகளில் பச்சிளம் குழந்தை ஒன்றும் இருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM