வோர்னர், ஸ்மித், ஹெட் அரைச் சதங்கள் குவிப்பு; அவுஸ்திரேலியா 339 - 5 விக்.

Published By: Nanthini

29 Jun, 2023 | 03:28 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (28) ஆரம்பமான 2ஆவது ஆஷஸ் மற்றும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் குவித்த அரைச் சதங்களுடன் அவுஸ்திரேலியா சிறப்பான நிலையில் இருக்கிறது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எவ்வாறாயினும், டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் முதல் நிலை வீரரான ஜோ ரூட், முதலாம் நாள் கடைசி ஆட்ட நேர பகுதியில் 4 பந்துகளில் 2 விக்கெட்களை கைப்பற்றி இங்கிலாந்துக்கு ஆறுதலை ஏற்படுத்தினார்.

எஜ்பெஸ்டனில் கடந்த வாரம் கடைசி வரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த டெஸ்டிலும் வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியில் முதலாவது ஓவர் வீசி முடிக்கப்பட்டபோது 2 Just Stop Oil ஆர்ப்பாட்டக்காரர்கள் மைதானத்துக்குள் புகுந்ததால் ஆட்டம் சற்று நேரம் தடைப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை ஜொனி  பெயார்ஸ்டோவ் அலாக்காக தூக்கி எல்லைக்கோட்டுக்கு அப்பால் விட்டார். பெயார்ஸ்டோவின் இந்தத் துணிகர செயலால் லோர்ட்ஸ் ஆடுகளம் பாதுகாக்கப்பட்டது.

மற்றைய ஆர்ப்பாட்டக்காரரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளியேற்றினர். மூன்றாவது ஆட்டக்காரர் மைதானத்துக்குள் நுழைவதற்கு முன்னர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

ஆரம்ப வீரர் டேவிட் வொர்னர் 20 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஸ்டுவர்ட் ப்றோடின் பந்துவீச்சில் கொடுத்த  பிடியை 4ஆவது ஸ்லிப் ஒல்லி போப் தவறவிட்டார்.

இதனை சாதகமாக்கிக்கொண்ட டேவிட் வோர்னர் 66 ஓட்டங்களைப் பெற்றார்.

வோர்னரும் 17 ஓட்டங்களைப் பெற்ற உஸ்மான் கவாஜாவும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், அவர்கள் இருவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லபுஸ்சான் 47 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஸ்டீவன் ஸ்மித் 43 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அடுத்து களம் புகுந்த ட்ரவிஸ் ஹெட் வேகமாக ஓட்டங்களை பெற்றவண்ணம் இருந்தார்.

இதன் பலனாக அவுஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், இங்கிலாந்து அணியில் இடம்பெறும் ஒரே ஒரு சுழல்பந்துவீச்சாளரான ஜோ ரூட், அதே மொத்த எண்ணிக்கையில் 4 பந்துகள் இடைவெளியில் ட்ரவிஸ் ஹெட், சகலதுறை வீரர் கெமரன் க்றீன் (0) ஆகிய இருவரது விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்துக்கு ஆறுதலைக் கொடுத்தார்.

ட்ரவிஸ் ஹெட் 73 பந்துகளில் 14 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்று ஸ்டீவ் ஸ்மித்துடன் 4ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் 149 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள் உட்பட 88 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் ஜோ ரூட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் டங் 88 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மொயீன் அலி, முதலாவது ஆஷஸ் டெஸ்டுக்கு மீளழைக்கப்பட்டபோதிலும் 2ஆவது டெஸ்டில் இணைக்கப்படவில்லை.

2021 செப்டெம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மொயீன் அலி, உபாதைக்குள்ளான முன்னணி சுழல்பந்துவீச்சாளர் ஜெக் லீச்சுக்கு பதிலாக அணிக்கு மீளழைக்கப்பட்டு முதல் டெஸ்டில் விளையாடியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29
news-image

ஹேல்ஸ், பானுக்க அசத்தலான துடுப்பாட்டம்; கண்டி ...

2024-07-11 00:12:14
news-image

இலங்கையை 88-44 என்ற புள்ளிகள் கணக்கில்...

2024-07-10 23:56:19
news-image

ரைலி ரூசோவ் அபார சதம் குவிப்பு;...

2024-07-10 19:43:10
news-image

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு...

2024-07-10 16:28:07
news-image

7ஆவது அகில இலங்கை வில்லாளர் போட்டியில்...

2024-07-10 16:27:20