காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடும் மழை, குளிருக்கு மத்தியிலும் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பின்னணிகள் எவையும் இன்றி சுயேட்சையாக இளைஞர்கள் ஒன்று கூடி, கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு போராட்டங்கள் அங்காங்கே இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.