தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 170 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற அதிகூடிய ஓட்டங்களாக 170 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு நியுஸிலாந்து அணிக்கெதிராக 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையே அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது.

இதேவேளை தென்னாபிரிக்க மண்ணில் முதற்தடவையாக  தொடரை கைப்பற்றியும் இலங்கை அணி சாதனைப்படைத்துள்ளது.