ரயில் நடைமேடையில் திருமணம்: கடமைக்காக பொலிஸ் வீரர் செய்த தியாகம்!

Published By: Devika

26 Jan, 2017 | 02:58 PM
image

தனது தனிப்பட்ட வாழ்க்கை தன்னுடைய கடமைக்குத் தடையாக வந்துவிடக்கூடாது என்று நினைத்த சீன பொலிஸ் அதிகாரி ஒருவர், ரயில் மேடையிலேயே தனது திருமணத்தை நடத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஸாங் க்விங்குவா என்பவர் ஒரு பொலிஸ் அதிகாரி. அவரது காதலி ஹுவாங் மெங்ஜியோ. இருவரும் ஜனவரி 23ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டனர். என்றாலும், ஜனவரி 28ஆம் திகதி சீனப் புத்தாண்டு தினம் என்பதால் பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக பொலிஸாருக்கு விடுமுறை மறுக்கப்பட்டது.

எனினும் குறித்த நாளில் திருமணத்தை நடத்திவிட முடிவெடுத்தனர் காதலர்கள் இருவரும்! இதையடுத்து ஜனவரி 23ஆம் திகதி, மணமகளான ஹுவாங் வாழும் ஸேஜியாங் மாகாணத்துக்கு ரயிலில் சென்று இறங்கினார் ஸாங். அங்கு, ரயில் நிலைய நடை மேடையில் மணமகளின் தரப்பில் அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் காத்திருந்தனர். அங்கேயே ஹுவாங்குடன் மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்தார் ஸாங்.

சற்று நேரத்தில் அடுத்த ரயிலைப் பிடித்து மீண்டும் தனது வசிப்பிடத்துக்குத் திரும்பினார் ஸாங். கடமையைச் சரிவரச் செய்வதற்காக தன் திருமண நிகழ்வையே தியாகம் செய்த இந்த மணமகனை சீன மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right