மோட்டார் சைக்கிள்களில் நீர்ச்சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்   

Published By: Nanthini

28 Jun, 2023 | 02:19 PM
image

சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில், அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர்ச்சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

அறுகம்பை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தினால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. பதாதைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் நிரம்பியிருந்த இப்பேரணி பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவிக்கையில், 

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வியாபார நடவடிக்கைக்காக சுற்றுலாப்பயணிகளின் நீர்ச்சறுக்கல் படகுகளை (surfing board) சைக்கிள்களில் ஏற்றிச் செல்வதற்காக வாடகைக்கு விடுகின்றனர். இதனால் சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கவலையோடு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

தமக்குள்ள இப்பிரச்சினைகளை போக்குவரத்து பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தவர்கள், மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் நீர்ச்சறுக்குப் படகுகளை (surf board) அகற்றி, வீதி விபத்துக்களிலிருந்து சுற்றுலாப்பயணிகளையும் மக்களையும் பாதுகாத்து, தமது வாழ்வாதாரத்தையும் சிக்கலின்றி முன்கொண்டு செல்வதற்கு பொலிஸார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கோரும் வகையிலான மகஜர் ஒன்றை இதன்போது பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸிடம் பேரணியினர் கையளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13