யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எம்து செய்தியாளர் தெரிவித்தார்.

புதிய பெண்கள் விடுதியின் முதலாமாடியில் இன்று பகல் ஏற்பட்ட தீ பரவியதில் விடுதியின்  ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் விடுதியில் இருக்கும் மாணவிகளை அப்புறப்படுத்தம் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

மின்னொழுக்கு காரணமாக தீயேற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றபோதிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.