(எம்.எம்.சில்வெஸ்டர்)
சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொது கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோபா குழு) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளதாக சிங்கள நாளேடொன்ற செய்தி வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் 259 வாகனங்கள் வெளி தரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த கோபா குழு தலைவர், வாகன நிர்வாகம் தொடர்பான தரவுப் பட்டியலில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில், கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இந்த 1794 வாகனங்களில், 679 மோட்டார் வாகனங்களும், 1115 மோட்டார் சைக்கிள்களும் அடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலான கார்கள் தற்போது சுகாதார அமைச்சின் வசம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், குறித்த வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதை நிறுத்துமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதன்படி, குறித்த வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சுகாதார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலமாக 425 வாகனங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர முடிந்திருந்த போதிலும், அவை ஏலத்தில் விடப்பட்டு முறைக்கேடு நடந்துள்ளதா என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1115 மோட்டார் சைக்கிள்களில் 11 மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இவற்றில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் கள அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாகவும், ஓய்வு பெற்றதன் பின்னர் தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான மேலதிக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் பெரும்பாலானவை 1950 முதல் 1996 வரையான காலப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டவை என்றும், வாகனங்கள் காணாமல் போவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM