ஸ்கொட்லாந்தை வீழ்த்தி முழுமையான வெற்றியுடன் சுப்பர் 6 இல் நுழைந்தது இலங்கை

27 Jun, 2023 | 07:41 PM
image

(நெவில் அன்தனி)

புலாவாயோ குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற பி குழுவில்  ஸ்கொட்லாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை,  ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் முழுமையான வெற்றியுடன் சுப்பர் 6 சுற்றை எதிர்கொள்ளவுள்ளது.

தனது கடைசி தகுதிகாண் போட்டியில் துடுப்பாட்டத்தில் இலங்கை பெரிய அளவில் பிரகாசிக்காத போதிலும் பந்துவீச்சில் அசத்தி ஸ்கொட்லாந்துடனான போட்டியில் வெற்றிபெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், சகல பந்துவீச்சாளர்களினதும் துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கையை வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

திமுத் கருணாரட்ன (7), குசல் மெண்டிஸ் (1) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

எனினும், பெத்தும் நிஸ்ஸன்கவும் சதீர சமரவிக்ரமவும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.  

சதீர சமரவிக்ரம (26) ஆட்டம் இழந்தைத் தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்க மேலும் 44 ஓட்டங்களை 4ஆவது விக்கெட்டில் சரித் அசலன்கவுடன் பகிர்ந்தார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 10 பவுண்டறிகளுடன் 75 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சரித் அசலன்கவும் தனஞ்சய டி சில்வாவும் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து 200 ஓட்டங்களைக் கடப்பதற்கு இலங்கைக்கு உதவினர். அவர்கள் இருவரது இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

சரித் அசலன்க 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களையும் பின்வரிசையில் வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களையும் மஹீஷ் தீக்ஷன ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் க்றீவ்ஸ் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க் வொட் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் சோல் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

246 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 29 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் கிறிஸ்டோபர் மெக்ப்றைட் 29 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் ஏனைய முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் 22ஆவது ஓவரில் ஸ்கொட்லாந்தின் 8ஆவது வீக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 100 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், கிறிஸ் க்றீவ்ஸ், கிறிஸ் சோல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

கிறிஸ் க்றீவ்ஸ் 41 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களையும் கிறிஸ் சோல் 17 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மார்க் வொட் 14 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மஹீஷ் தீக்ஷன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-16 13:57:56
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56