இந்திய விமானமொன்றில் பயணிகளுக்கான ஆசனங்கள் மீது சிறுநீர், மலம் கழித்த குற்றச்சாட்டில் பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி மும்பையிலிருந்து டெல்லிக்கு பறந்துகொண்டிருந்த தனது விமானமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளைட் ஏஐ 866 எனும் இவ்விமானத்தின் 9 ஆவது வரிசை ஆசனங்கள் மீது சிறுநீர் கழித்தார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, விமான ஊழியர்களால் மேற்படி பயணி தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தார் எனவும், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இவ்விமானம் தரையிறங்கிய பின்னர், மேற்படி நபர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் எனவும் எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராம் சிங் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்நபர் உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஒழுங்கீனம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடத்தை தொடபில் பூச்சியம் சகிப்புத்தன்மையை எயார் இந்தியா பின்பற்றுவதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM