பதுளை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் களஞ்சியசாலை கதவு உடைக்கப்பட்டு இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 

இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

பதுளை புதிய சுப்பர் மார்க்கெட் கட்டிடத் தொகுதியிலுள்ள களஞ்சியசாலையிலேயே இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.