வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கார்த்திகேசு நாதன் (முல்லைத்தீவு), குழந்தைவேல் தயாபரன் (கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை யோகராசா (மட்டக்களப்பு) ஆகியோரே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, பூந்தோட்டம் புனர்வாழ்வு பணியகப் பணிப்பாளர், பின்இணைப்பு அதிகாரி, சம்யத்தலைவர்கள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, சமூகயமப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் இப்புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய 10 பேருக்கு சுயதொழிலினை மேற்கொள்வதற்காக தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.