நியூயோர்க் பாடசாலைகளில் தீபாவளிக்கு விடுமுறை: நகர மேயர் அறிவிப்பு

Published By: Sethu

27 Jun, 2023 | 12:13 PM
image

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பாடசாலைகளில் தீபாவளி தினமானது விடுமுறை தினங்களின் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக அந்நகர மேயர் எரிக் அடம்ஸ் தெரிவித்துள்ளார். 

நியூயோர்க் மாநகர சபையில் நேற்று திங்கட்கிழமை(26) நடைபெற்ற  நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.  

நியூயோர்க் பாடசாலைகளில் தீபாவளியை விடுமுறைத் தினமாக பிரகடனப்படுத்துமாறு அங்குள்ள தெற்காசிய மற்றும் இந்தோ – கரீபியன் சமூகத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நியூயோர்க் மாநகர சபை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் முன்வைத்த பிரேரணைக்கு அம்மாநகர சபை அங்கீகாரம் வழங்கியது. 

 நியூயோர்க் மாநகர சபை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார்  உரையாற்றுவதை மேயர் எரிக் அடம்ஸ் அவதானிக்கிறார்

நியூயோர்க் மாநிலத்தில் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 180 நாட்கள் பாடசாலைகள் இயங்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையில், இதுவரை நியூயோர்க் நகர பாடசாலைகளில் விடுமுறை தினமாக விளங்கிய புரூக்ளின் குயீன்ஸ் தினத்துக்கு பதிலாக. தீபாவளி தினம் விடுமுறை நாளாக சேர்க்கப்படவுள்ளது. 

நியூ யோர்க் மாநில சட்டமன்றத்தின் கீழ் சபையிலும் செனட் சபையிலும் இதற்கான சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது. 

இச்சட்டமூலம் அமுலுக்கு வருவதற்கு அதில் மாநில ஆளுநர் கெத்தி ஹோசுல் அதில் கையெழுத்திட வேண்டும். எனினும், அவர் அதில் கையெழுத்திடுவார் என தான் எதிர்பார்ப்பதாக மேயர் அடம்ஸ் தெரிவித்தார். 

நியூயோர்க்  செனட்டர் ஜோ அட்டாபோ (மத்தியில்), மேயர் எரிக் அடம்ஸ், ஜெனிபர் ராஜ்குமார் 

நியூயோர்க் மாநில செனட் சபையில் இச்சட்டமூலத்தை முன்வைத்த செனட்டர் ஜோ அட்டாபோ கருத்துத் தெரிவிக்கையில், தனது சட்டமூலம் செனட் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துடன் இது குறித்து தான் பெருமையடைவதாகவும் கூறினார்.

எவ்வாறெனினும், இவ்வருடம் தீபாவளி எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால், இவ்வருட பாடசாலை விடுமுறைத் திட்டத்தில் இச்சட்டமூலம் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டாது. அடுத்த வருடம் நியூயோர்க் பாடசாலைகளில்  முதல் தடவையாக தீபாவளி விடுமுறைத் தினமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து...

2026-02-18 11:57:07
news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16
news-image

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

2026-02-15 11:17:58