விமானம் செல்ல தாமதித்தமையால் தென்கொரியாவுக்கு பயணிக்க முடியாமல் போனோரின் தொழில் வாய்ப்புக்கள் பாதுகாக்கப்பட்டன - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 

Published By: Vishnu

26 Jun, 2023 | 08:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா எயாலைன்ஸ் சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தென் கொரியாவில் தொழில் நிமித்தம் புறப்பட்டு செல்வதற்கு முடியாமல்போன தொழிலாளர்கள் குழுவினர் தென்கொரியாவை நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி 52 தொழிலாளர்களுடன் தென்கொரியாவை நோக்கி புறப்பட்டுச் செல்ல தயாராகி இருந்த விமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாங்கள் எதிர்பார்த்திருந்த பிரகாரம் குறித்த தினத்தில் தென்கொரியாவை நோக்கு செல்ல முடியாமல் போனது. இதன் காரணமாக அவர்களுக்கு உரித்தாகி இருந்த தொழில் வாய்ப்புகளும் இல்லாமல் போகும் அபாயம் இருந்தது.

இது தொடர்பாக தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேரடியக தலையிட்டு, விரைவாக அவர்களின் தொழிலை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருந்தார்.

அதன் பிரகாரம் செயற்பட்ட பணியக அதிகாரிகள் தென் கொரியாவின் மனிதவள திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி குறித்த தொழிலாளர்களை விரைவாக தென்கொரியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதன் பெறுபேறாக நேற்று முன்தினம் குறித்த தொழிலாளர்கள் ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 470 என்ற விமானம் ஊடாக தென்கொரியாவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக தென்கொரியாவின் கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற 52பேரைக்கொண்ட குழுவும் நேற்று முன்தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தெள்கொரியாவை நோக்கி புறப்பட்டுச்சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடிக்கு புதிய லிபரல்வாத பொருளாதார...

2024-09-12 23:33:54
news-image

யாழில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை...

2024-09-12 23:18:28
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,610 ...

2024-09-12 21:51:20
news-image

திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ்,...

2024-09-12 21:03:28
news-image

தனமல்விலயில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு ;...

2024-09-12 20:00:12
news-image

காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதியை கண்டுபிடிக்க விசேட...

2024-09-12 19:56:10
news-image

முச்சக்கரவண்டி விபத்தில் கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு ;...

2024-09-12 19:52:04
news-image

நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே...

2024-09-12 19:32:03
news-image

இலங்கைத் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு? -...

2024-09-12 19:06:41
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும்...

2024-09-12 18:27:44
news-image

அச்சுறுத்தல்களால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுக்க...

2024-09-12 18:23:24
news-image

தேசிய ஷுரா சபை பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி...

2024-09-12 17:36:34