(எம்.மனோசித்ரா)
இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கு முழுமையான ஆதரவளிக்கப்படும் என்று ருமேனியா தெரிவித்துள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்புக்கள், பொருளாதார ஒத்துழைப்புக்கள் , முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் , ருமேனிய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ட்ரேயன் ஹிஸ்டியாவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ருமேனிய தலைநகரான புகரேஸ்ட்டில் இலங்கை தூதரகமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ட்ரேயன் ஹிஸ்டியா பிரதமரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்குள் பெரும்பாலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியமை தொடர்பில் ருமேணியா அரசாங்கத்துக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு முதல் ருமேணியா இவ்வாறு அதிகளவான வேலை வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு வழங்கி வருகிறது.
இதன் போது கட்டடம் , ஆடைத் தொழிற்சாலை, ஹோட்டல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் அந்நாட்டில் சுமார் 32 000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ருமேனியா தற்போது பல பாரிய உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி வருவதால், இலங்கையர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி, விவசாயம், புகையிரதம், தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலாத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமர் , ருமேனிய இராஜாங்க அமைச்சரிடம் கேட்டு;க் கொண்டார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவு நாட்டுக்கு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைகளை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ருமேனிய இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM