கடும் நிபந்தனைகளை நீக்க நாணய நிதியத்துடன் அரசு பேச வேண்டும் - எஸ்.எம்.மரிக்கார்

26 Jun, 2023 | 04:50 PM
image

(எம்.மனோசித்ரா) 

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் இணைந்து தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டாமெனக் கூறினால் , அரசாங்கத்துக்கு அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியேற்படும்.

அவ்வாறில்லை எனில் அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் காணப்படும் கடுமையான நிபந்தனைகளை நீக்குவது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (26)  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேசிய கடன் மறுசீரமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கும் தெரியாது. மத்திய வங்கியின் நிதிசபை உறுப்பினர்களுக்கும் தெரியாது.

கடந்த வாரம் குறித்த அதிகாரிகள் பாராளுமன்ற மேற்பார்வை குழுவுக்கு அழைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் தமக்கு எந்த தகவலும் தெரியாது எனக் கூறுகின்றனர்.

ஆனால் ஜனாதிபதியின் அமைச்சரவைக்கு இது தொடர்பில் தெரியும். தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் அது ஊழியர் சேமலாப நிதியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த மதிப்பீடும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய வங்கி ஆளுனர் இது தொடர்பில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பொறுப்பான நிதி சபையுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறினால், அரசாங்கத்துக்கு அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டியேற்படும். அல்லது தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த கடுமையான நிபந்தனைகளை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00