இலங்கையின் நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு முக்கியமானது - அமைச்சர் விஜயதாச

Published By: Vishnu

26 Jun, 2023 | 12:48 PM
image

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை  பாராட்டுவதாக  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

ஆவர் தொடர்ந்தும் கூறுகையில்,

புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம்.

இலங்கையில் இயல்புநிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் ஏற்படுத்தியுள்ளது. இது ராஜபக்ஷ குடும்பத்தை வெளியேற்ற வழிவகுத்தது.

இந்த நெருக்கடியானது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் போராடி  வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்தோம். 2016 ஆம் ஆண்டு சகல செயற்பாடுகளையும் ஆரம்பித்து, காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள், சமாதானத்தை ஏற்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட்டோம்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவுள்ளதுடன், அனைத்து சமூகங்களுடனும் ஒருமித்த கருத்துடன் நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். பல வழக்குகள் இருந்தன, பல கைதிகள் இருந்தன. இருப்பினும், இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறியுள்ளன. இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38