தொல்லியல் விவகாரத்தில் பௌத்த தேரர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க

Published By: Digital Desk 3

26 Jun, 2023 | 10:57 AM
image

(எம்.மனோசித்ரா)

தொல்பொருளியல் விவகாரத்தில் பௌத்த தேரர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும். அவர்களது செயற்பாடுகளாலேயே வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்து பௌத்த தேரர்களிடம் பல சந்தர்ப்பங்களில் நேரடியாக தெரிவித்துள்ள போதிலும், அவர்கள் அதனை ஏற்க முன்வரவில்லை என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

தொல்பொருளியல் எனக் கூறி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தொல்பொருளியல் என்பது சட்டத்துக்குட்பட்ட விடயமாகும். தொல்பொருள் கட்டளை சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்தோடு இந்த விவகாரத்தில் பௌத்த தேரர்களும், அரசியல்வாதிகளும் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும். சட்டத்துக்கமைய தொல்பொருள் திணைக்களத்துக்கு மாத்திரம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும்.

அதனை விடுத்து தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை முன்னெடுக்கும் பகுதிகளுக்குச் சென்று அங்கு சில பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக வீண் பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. எனவே இந்த விடயத்தில் தலையிடுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

இந்து ஆலயங்களை அழிப்பதற்கோ , தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கோ எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இலாபத்தை ஈட்ட முயற்சிக்காமல் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வட, கிழக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள்...

2024-12-11 18:33:29
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01