சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் ; நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : மக்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள் - அநுரகுமார

25 Jun, 2023 | 07:48 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த சட்டங்கள் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

எனினும் ஆட்சியாளர்கள் இந்த சட்டங்களில் சிக்கியுள்ளமையால் அதிலிருந்து விடுபடும் வழிமுறையையே சிந்திக்கிறார்கள்.

மக்களின் எதிர்பார்ப்பும், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் இரண்டு விதமாக இருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உங்கள் எதிர்பார்ப்பு என்ன? சட்டம் பாதுகாக்கப்படும் ஒரு நாடு. அத்துடன் அந்த சட்டங்கள் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றை எதிர்பார்க்கிறீர்கள். எனினும் ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

நாம் சட்டத்தில் சிக்கியுள்ளோம். அதிலிருந்து விடுபடும் வழிமுறையை பார்க்கிறார்கள்.

எனினும் மக்களின் எதிர்பார்ப்பும், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் இரண்டு விதமான இருக்கிறது. எந்த திசையில் கட்டியெழுப்படுகிறது என கூற முடியுமா?

தொட்டில் இந்த பக்கம் இருக்கும். மீண்டும் 5 வருடங்களில் மறுபக்கத்திற்கு சென்று விடும். அழகான முறையில் அந்த தொட்டில் ஆடுகிறது. 

சிலர் தொட்டில் ஆடும் போது அதில் ஏறி மறுபுறம் வருகின்றனர். எவரும் இறங்குவதில்லை. தற்போது தொட்டில் இடையில் சிக்குண்டுள்ளது. எனவே அதனை தடுப்பதற்கான அனைத்து விடயங்களையும் அவர்கள் மேற்கொள்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய பாராளுமன்றத்துக்காவது அனுபவம் மிக்கவர்களை மக்கள்...

2024-11-03 21:43:03
news-image

வவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்கூட்டம்!

2024-11-03 21:51:43
news-image

தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு...

2024-11-03 21:41:21
news-image

லொஹான் ரத்வத்த பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்...

2024-11-03 20:45:01
news-image

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது -...

2024-11-03 19:46:53
news-image

மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதா?...

2024-11-03 19:33:58
news-image

மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி...

2024-11-03 20:53:28
news-image

1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என...

2024-11-03 20:52:45
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,408...

2024-11-03 17:32:08
news-image

மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய...

2024-11-03 17:11:21
news-image

வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் உருவாகிறது -...

2024-11-03 16:40:17
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-11-03 16:15:12