(நெவில் அன்தனி)
அயர்லாந்துக்கு எதிராக புலாவாயோ, குவீன் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றுவரும் 'பி' குழுவுக்கான ஐ.சி.சி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.
திமுத் கருணாரட்ன குவித்த அபார சதம், சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன இலங்கையை பலமான நிலையில் இட்டது.
தனது 40 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் திமுத் கருணாரட்ன முதலாவது சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதற்கு முன்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது அதிகபட்ச எண்ணிக்கை 97 ஓட்டங்களாகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் 2019 ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே திமுத் கருணாரட்ன 97 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பெத்தும் நிஸ்ஸன்க (20), குசல் மெண்டிஸ் (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 8.4 ஓவர்களில் 48 ஓட்டங்களாக இருந்தது.
எனினும், திமுத் கருணாரட்ன, சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 168 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர்.
சதீர சமரவிக்ரம 86 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார். 12 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
மறுபக்கத்தில் தனது 5ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த திமுத் கருணாரட்ன மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி, அதனை சதமாக பரிணமிக்கச் செய்தார். 103 பந்துகளை எதிர்கொண்ட திமுத் கருணாரட்ன 8 பவுண்டறிகளுடன் 103 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் திறமையாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களையும், சரித் அசலன்க 38 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கைக்கு 21 வைட்டுகளுடன் 27 உதிரிகள் கிடைத்தன.
அயர்லாந்து பந்துவிச்சில் மார்க் அடயார் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், பெறி மெக்கார்த்தி 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், கெரத் டிலேனி 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு அயர்லாந்து துடுப்பெடுத்தாடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM