நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை கன மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம்  மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரவு நேரங்களிலேயே குறித்த மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.