(எம்.வை.எம்.சியாம்)
சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அது தொடர்பில் தகவல்களை பெற்றுத் தரும் தரப்பினருக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் புழக்கத்தில் இருப்பது, இந்த நாட்களில் பல குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் படி, சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனிநபர் தகவல் வழங்குநர்களுக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) முதல் அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்படும் சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், டீ-56 துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்படும்போது பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் தனிநபர் தகவல் வழங்குநருக்கு 2,50,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படவுள்ளது.
சந்தேக நபர் ஒருவர் இன்றி துப்பாக்கியை மாத்திரம் கைப்பற்றப்படும் சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 2 இலட்சம் ரூபாவும், தனிநபர் தகவல் வழங்குநருக்கு 2,50,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ கருத்து தெரிவிக்கையில்,
நாம் நாட்டு மக்களிடத்தில் கோரிக்கையை முன்வைக்கிறோம். சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தம் வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள்.
119 அல்லது 1997 எனும் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும்.
வழங்கப்படும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும். மக்களால் வழங்கப்படும் இவ்வாறான ஒத்துழைப்புகள் நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM