திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு நேற்று சனிக்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் மற்றும் திருகோணமலை நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நகரசபை மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் இணைந்து திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தன.
மேலும், இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர், திருகோணமலை நகரசபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, கடந்த காலங்களில் திருகோணமலையில் 20க்கும் மேற்பட்ட மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும், மான்களின் பாதுகாப்பு, அவற்றின் உணவு போன்ற விடயங்களை கவனிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் அதிகமான மான்களைக் கொண்ட இடமாக திருகோணமலை திகழும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM