லத்தீப் பாரூக்
இஸ்ரேல் அதன் சுதந்திர தினம் எனக்கூறி ஜுன் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் கொண்டாடியுள்ளது. வரலாற்றுக்கு அந்நியமானதொரு நாடு தான் இஸ்ரேல்.
1948இல் பலஸ்தீனத்தின் இருதய பகுதியில் அதுபலவந்தமாக ஸ்தாபிக்கப்பட்டது. மத்திய கிழக்கை சீர்குலைப்பதற்காக ஐரோப்பாவில் இருந்தும் ஏனைய பாகங்களில் இருந்தும் யூதர்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு குடியமர்த்தப்பட்டனர்.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பலஸ்தீனம் துருக்கிப்பேரரசின் கீழிருந்த பிரதேசமாகும். 1896இல் இப்பிரதேசத்தின் சனத்தொகையில் 96சதவீதமானவர்கள் அரபிகளாக இருந்தனர். நான்கு சதவீதம் மட்டுமே யூதர்கள் அங்கிருந்தனர். உலகில் மிகவும் அமைதியானதோர் பிரதேசமாக அதுகாணப்பட்டது. பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் யூதர்களின் வருகையோடு தான் அங்கு வன்முறைகள் தலைதூக்கின.
1897இல் முதலாவது உலக சியோனிஸ காங்கிரஸின் சந்திப்பு சுவிஸில் உள்ள பெஸ்ல் நகரில் இடம்பெற்றது. பலஸ்தீனத்தில் யூத நாட்டை நிறுவும் முடிவு இங்கு தான் எடுக்கப்பட்டது. பத்து வருடங்கள் கழித்து 1907இல் லண்டனில் இடம்பெற்ற காலணித்துவ மாநாட்டில் மத்திய கிழக்கை கொந்தளிப்பில் வைத்திருக்கக்கூடிய ஒருதீய சக்தியை பலஸ்தீனத்தில் அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்ற முடிவை பிரித்தானியா எடுத்தது.
இந்த முடிவு பிரித்தானிய சியோனிஸ யூத சக்திகளையும் ஒன்றிணைத்தது. முதலாவது உலகப்போரில் துருக்கி சாம்ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்ட பின் 1917இல் பலஸ்தீனப் பிரதேசம் பிரித்தானிய ஆதிக்க அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதுவே பலஸ்தீன பூமியில் யூதர்களின் குடியேற்றத்துக்கும் வழியமைத்தது.
நிராயுதபாணிகளான பலஸ்தீனர்கள் இந்த நடவடிக்கைகளை எதிர்த்தனர். யூத பயங்கரவாத ஆயுதக் குழுக்களான ஹகானா, ஸ்டேர்ன், இர்குன், ஸ்வாய் லியூமி போன்ற அமைப்புக்கள் மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் போன்ற பயங்கரவாதத்தின் ஞானத்தந்தைகளால்; வழிநடத்தப்பட்டன. பிற்காலத்தில் இவர்கள் அந்த நாட்டின் பிரதமர்களாகவும் பதவி வகித்துள்ளனர்.
யூதர்களுக்காக முன்மொழியப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய நாட்டில் கூட அப்போது அரபிகள் தான் பெரும்பான்மையானவர்களாகக் காணப்பட்டனர். அன்றிருந்த 1இ008இ900 அரபு, யூத கலப்பு சனத்தொகையில் அரபிகள் 509இ780 ஆகவும்; 499இ120 பேர் யூதர்களாகவுமே இருந்தனர்.
பலஸ்தீனர்களுக்கு சொந்தமான 40இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளையும் யூதர்கள் கொள்ளையடித்துக் கொண்டனர். இச்சட்ட விரோத இஸ்ரேலை அமைக்க 50க்கும் மேற்பட்ட பலஸ்தீன கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.
தற்போது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன பூமியில் உலகில் எந்தப்பாகத்தில் இருந்தேனும் யூதர்கள் சென்று குடியேறலாம். ஆனால் அந்தக்காணிகள் பலவற்றினது சட்ட ரீதியான ஆவணங்களும் வீடுகளின் சாவிகளும் கூட இன்றும் பலஸ்தீன மக்களிடம் தான் இருக்கின்றன. ஆனால் அந்த மக்களுக்கு அங்கே திரும்பிச் செல்ல முடியாது.
இஸ்ரேல் தான் உலகில் நிரந்தர எல்லைகள் அற்ற ஒரேநாடு. யுத்தக்குற்றவாளிகளை மீண்டும் மீண்டும் பிரதமர்களாகத் தெரிவு செய்யும் உலகின் நாடும் இஸ்ரேல் தான். இவர்களுக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகப்பெரிய வரவேற்புகளும் மரியாதைகளும் வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்களிடம் இருந்து அறவிடப்படும் பணம் இதற்கென செலவிடப்படுகின்றது. புலஸ்தீனர்களின் வடுகள் தரைமட்டம் ஆக்கப்படுகின்றன. அவர்களின் பண்ணை நிலங்கள் நாசமாக்ககப் படுகின்றன, அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு மறுக்கப்படுகின்றன.
அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொடூரமான முறைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இஸ்ரேலிய சிறைகளில் இன்றும்கூட 11000த்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். காஸா பிரதேசம் திறந்த வெளிச் சிறைச்சாலை போல் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 15இலட்சம் மக்கள் அடைக்கப்பட்டு அவர்களைச்சுற்றி பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேற்குக் கரையிலும் காஸாவிலும் மனிதாபிமானமற்ற இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் படுகொலைகளும் குற்றச் செயல்களின் பட்டியலும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
உலகில் இ;நாட்டில் தான் ரப்பி என்று அழைக்கப்படும் ஒரு யூத மதகுருவுக்கு ‘பத்து இலட்சம் பலஸ்தீன மக்களின் உயிர்கள் கூட ஒரு யூதனின் நகத்துண்டுக்கும் சமமானதல்ல’ என்று பகிரங்கமாகக் கூறிவிட்டு சுதந்திரமாக நடமாட முடியும்.
1970களில் சியோனிஸம் ஒரு இனவாதக் கோட்பாடு என ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனம் செய்யப்பட்டது. உலகில் இஸ்ரேல் தான் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்கள் மூலம் அதிகளவு கண்டனத்துக்கு உள்ளான நாடாகும். இதுவரை சுமார் 120க்கும் அதிகமான கண்டனத் தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தினதும் அதற்கு அப்பாலும் உலகின் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு ஒரேகாரணியாக இருப்பதும் இஸ்ரேல் தான். அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பூரண ஆதரவு காரணமாக குற்றச் செயல்களைப் பொருத்தமட்டில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டிலும் ஐக்கிய நாடுகள் சபை செயலிழந்து காணப்படுகின்றது.
அரபு சர்வாதிகாரிகளால் கைவிடப்பட்ட பலஸ்தீன மக்கள் தங்களைத் திரும்பிப் பார்க்கக் கூட எவரும் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யார் பயங்கரவாதக் குற்றங்களைப் புரிந்தார்களோ, இன்னும் புரிந்து கொண்டு இருக்கின்றார்களோ, மத்திய கிழக்குப் பிராந்தியத்துக்கும் உலகுக்கும் யார் பயங்கரவாதத்தை அறிமுகம் செய்தார்களோ அதேயூதர்களால் இன்று பலஸ்தீன மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.
பலஸ்தீன மக்கள்மீது இஸ்ரேல் புரிந்து வந்த குற்றச்செயல்களை இலங்கை ஊடகங்களும் இதுவரை மூடிமறைத்தே வந்துள்ளன. அதற்கான காரணம் அவர்களுக்கே நன்கு தெரியும். ஆனால் இப்போதாவது இஸ்ரேல் பற்றிய உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நேரம் வந்துள்ளதாக அவர்கள் ஏன் கருதக்கூடாது?
முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது உலகளாவிய நிகழ்ச்சி நிரலுடன் இலங்கையில் இஸ்ரேல் நிலைகொண்டுள்ளமை நாசகரமானது, காரணம் அவர்கள் தமது சதித்திட்டங்களை அமுல் செய்வதில் மனிதாபிமானமற்ற கொடியவர்கள் ஆவர்.
தற்போது செயல் இழந்துள்ள சன் ஆங்கில பத்திரிகையில் 1960களின் பின் அரைப்பகுதியில் நான் பணியாற்றிய காலத்தில் அந்தக்கம்பனியை பொய்களை பரப்புவதற்காக இஸ்ரேல் பிரதிநிதி எவ்வாறு பயன்படுத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது.
இன்னும் இஸ்ரேல் கொஞ்சம் கூட மாறவே இல்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்த நாட்டுக்குள் பின் கதவு வழியாக நுழைவதும் பின்னர் வெளியேற்றப்படுவதும் நடந்த வண்ணமே உள்ளது. ஏவ்வாறேனும் மீண்டும் ஒரு தடவை தற்போது அவர்கள் இந்த நாட்டுக்குள் ஊடுறுவி உள்ளனர்.
இஸ்ரேல் பற்றிய மிகச் சிறந்த வர்ணங்களை பூசுவதற்காக யுடியுப் சமூக வலையமைப்பின் மூலம் அவர்கள் தமது கூலிப்படையினரைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அச்சுறுத்தல் பற்றி விரைவாக விழிப்படைந்து பதில் அளிப்பதே மிகவும் சிறந்ததாகும். இதன் தாமதம் ஏற்கனவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
அதேவேளை முஸ்லிமாக இருக்கின்ற இலங்கையின் வெளிவிகவார அமைச்சர் இஸ்ரேல் பற்றி சில வீட்டுப் பாடங்களைக் கற்றுக் கொள்வது மிகவும் சிறப்பானதாகும். அதன் குற்றப் பின்னணிகள் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் பகுதியில் அது நடத்தி வரும் அட்டூழியம் என்பன பற்றியும் அவர் படித்து தெரிந்து கொள்வது நல்லது.
மேலும் 1991இல் வெளியான “ டில றயல ழக னுநஉநிவழைn-வுhந அயமiபெ யனெ ரnஅயமiபெ ழக ய ஆழளளயன ழககiஉநச நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஒன்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையும் அவர் தேடிப் படித்து தெரிந்து கொள்வது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM