(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஏ குழுவில் நெதர்லாந்தை தொடர்ந்து ஸிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெற்றக்கொண்டன.
ஸிம்பாப்வேயுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைந்தபோதிலும் அக் குழுவில் இடம்பெற்ற நேபாளமும் ஐக்கிய அமொரிக்காவும் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் இந்தத் தோல்வி மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் சுற்றில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஸிம்பாப்வேயின் வெற்றியில் சிக்கந்தர் ராஸா, ரெயான் பேர்ல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் முக்கிய பங்காற்றின.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.
ஜோய்லோர்ட் கம்பி (26), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (47) ஆகிய இருவரும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், முதல் 4 விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் ஸிம்பாப்வே தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (112 - 4 விக்.)
எவ்வாறாயினும் சிக்கந்தர் ராஸா, ரெயான் பேர்ல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
சிக்கந்தர் ராஸா 68 ஓட்டங்களையும் ரெயான் பேர்ல் 50 ஓட்டங்களையும் சோன் வில்லியம்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கீமோ போல் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்கீல் ஹொசெய்ன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 44.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
கய்ல் மேயர்ஸ் (56), ப்றெண்டன் கிங் (20) ஆகிய இருவரும் ஆரமப் விக்கெட்டில் 6.3 ஓவர்களில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
32ஆவது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருந்தது. ஆனால், 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடைசி 6 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.
மத்திய வரிசையில் ஷாய் ஹோப் (30), நிக்கலஸ் பூரண் (34), ரொஸ்டன் சேஸ் (44) ஆகிய மூவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் டெண்டாய் சட்டாரா 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கராவா, ப்ளெசிங் முஸராபனி, சிங்கந்தர் ராஸா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM