(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் நேபாளத்தை வெளியேற்றி சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முதலாவது அணியாக நெதர்லாந்து தகுதிபெற்றது.
ஹராரே, ஹைபீல்ட் டக்காஷிங்கா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கக்கான ஐசிசி தகுதிகாண் சுற்றில் நேபாளத்தை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது.
பந்துவீச்சில் லோகன் வென் பீக் பதிவுசெய்த தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி, மெக்ஸ் ஓ'டவ்ட் குவித்த அரைச் சதம் என்பன நெதர்லாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 44.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரோஹித் பௌடெல் 33 ஓட்டங்களையும் சந்தீப் லமிச்சான் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லோகன் வென் பீக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9.3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விக்ரம்ஜித் சிங் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 27.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆரம்ப விக்கெட்டில் விக்ரம்ஜித் சிங்குடன் 80 ஓட்டங்களைப் பகிர்ந்த மெக்ஸ் ஓ'டவ்ட், 3ஆவது விக்கெட்டில் பஸ் டி லீட்டுடன் மேலும் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினார்.
மெக்ஸ் ஓ'டவ்ட் 90 ஓட்டங்களையும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் விக்ரம்ஜித் சிங் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சந்தீப் லமிசான் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM