காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடும் மழை, குளிருக்கு மத்தியிலும் தொடர்ந்து 4வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

14 பேர் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளும் இன்று அடையாள உணவுத்தவிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பின்னணிகள் எவையும் இன்றி சுயேட்சையாக இளைஞர்கள் ஒன்று கூடி, யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாலை 4 மணிக்கு கவனஈர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.