வயதானாலும் சருமத்தில் இளமையைத் தக்கவைத்துக்கொள்ள 10 டிப்ஸ்...

Published By: Ponmalar

24 Jun, 2023 | 04:40 PM
image

முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, 'ஏஜிங்' விரைவுபடுத்தப்படுகிறது. வயதாகும் தோற்றத்தை தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பார்க்கலாம். 

1. விளக்கெண்ணெய், சருமப் பிரச்சினைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 

2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்ஸைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும். 

3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது கூழை முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம். 

4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு வர, முதுமைத் தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனைத் தடவி வரலாம். 

5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும். 

6 கடலை மா, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும். 

7 நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும்; வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஒலிவ் ஒயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம். 

8 உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும். 

9 கெரட், ஒரேஞ்ச், பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும். 

10 தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஒலிவ் ஒயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்