எம்மில் பலரும் செல்வ வளத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆயுள் முழுவதும் செலவிட வேண்டும் என விரும்புவர். ஆனால் பலருக்கு தன வரவு சிறப்பாக இருந்தாலும், வீட்டிற்கு வந்தவுடன் மகிழ்ச்சி மறைந்துவிடும்.
சந்தோஷம் கரைந்து விடும். சிலருக்கு வருவாய் குறைவாக இருந்தாலும்.. வாடகை வீட்டில் இருந்தாலும்.. மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வலம் வருவர். இதற்கான காரணத்தை புரியாமல் தவிப்பர்.
இவர்களுடைய வீட்டில் தெய்வ சக்தி அதிகமாக இருக்கும். பொதுவாகவே ஒருவருடைய வீட்டில் நேர்நிலையான ஆற்றல் அதிகமாக இருந்தால் அங்கு கெட்ட விடயங்கள் இருக்காது.
கண்ணேறு இருந்தாலும், பில்லி, சூனியம் வைத்தாலும், இவர்களை எந்த பாதிப்பிற்கும் உள்ளாக்க இயலாது. மேலும் இவர்கள் தொடர்ந்து நேர் நிலையான சக்திகளை அதிகரிப்பதற்கான விடயங்களில் பங்குபற்றுவதால், இவர்களுடைய வீட்டில் தெய்வத்தின் அனுகூலம் இருந்து கொண்டே இருக்கும்.
உடன் எம்மில் சிலர் தெய்வத்தின் அனுகூலம் எம்முடைய இல்லங்களிலும் தொடர்ந்து நீடிக்க நாங்கள் எதனை கடைபிடிக்க வேண்டும்? என கேட்பர்.
நாம் ஒரு மனையை வாங்கி அதன் மீது ஒரு புது வீடு கட்டி கிரக பிரவேசம் நடத்துகிறோம். அதன் பிறகு அந்த வீட்டில் வாழ தொடங்குகிறோம். இந்த வீட்டினை கட்டுவதற்கு முன் அந்த மண் மீது என்ன இருந்தது? எம் மாதிரியான உயிர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தது? மண்ணின் அடியில் என்ன புதைந்திருந்தது? என்பதை அறிந்து கொண்டிருக்க மாட்டோம். அத்தகைய அறிவும், ஞானமும் மனிதனுக்கு கிடையாது. ஆனால் இத்தகைய ஞானம், சில பறவைகளுக்கு உண்டு. குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அணில்... போன்ற செல்ல பிராணிகளுக்கு, மண்ணில் புதைந்திருக்கும் சூட்சுமமான சக்தியை உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
இதனால்தான் எம்முடைய பெரியோர்கள் ஒரு வீட்டில் தெய்வ சக்தி வேண்டும் என வலியுறுத்துவார்கள். ஒரு வீட்டில் தெய்வத்தின் அருளாற்றல் இருந்தால்..., அந்த வீட்டில் நல்ல விடயங்கள் மட்டும் தொடர்ந்து அதிகமாக நடக்கும். இவர்களை எந்த துர் சக்தியும் அண்டாது. இந்த வீட்டில் செல்வமும், வெற்றியும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இதனால்தான் எம்முடைய பெரியோர்கள் ஒருவருடைய வீட்டிற்கு அணில், சிட்டுக்குருவி, புறா போன்ற பறவைகள் வருகை தந்தால்... அந்த வீட்டிற்கு தெய்வ சக்தி அதிகரிக்கும் என்றனர். ஏனெனில் இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தியையும், ஜீவாதார சக்தியையும் அறியும் ஆற்றல் உண்டு.
நீங்கள் புதிதாக குடியிருக்கும் வீட்டில் அல்லது வாடகை வீட்டில் தெய்வ சக்தியினை கொண்டு வரலாம். இதற்கு ஜீவாதார சக்தியை கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு உயிரினத்தை வளர்த்தால் போதுமானது. உங்களுடைய வீட்டிற்கும் தெய்வத்தின் ஆற்றல் கிடைக்கும்.
கிராமங்களில் சிலருடைய வீடுகளில் வாசலில் நெற்கதிரை கட்டி தொங்க விட்டிருப்பதை பார்த்திருப்பீர். இவை ஏன் என்றால்.. நெற்கதிரை வீட்டின் வாசலில் தொங்க விடுவதால், அதனை கொத்தி உண்பதற்கு சிட்டுக்குருவி, புறா போன்ற பறவைகள் வருகை தரும். அதனுடன் அவை அங்கேயே கூடுகட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் செய்யும்.
ஜீவாதார சக்தியை கொண்ட ஜீவன்களான புறா, குருவி போன்றவை கூடு கட்டினால்... அதனை கலைக்க கூடாது. சிலர் அறியாமையின் காரணமாகவும், சூழல் காரணமாகவும் இத்தகைய கூட்டை கலைப்பர். இது எம்முடைய வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமைந்துவிடும். அதனால் உங்களுடைய வீட்டில் புறா, சிட்டுக்குருவி போன்றவை கூடு கட்டினால் ...அதனை ஒருபோதும் கலைத்து விடாதீர்கள்.
அதேபோல் உங்களது வீட்டின் வரவேற்பறையிலோ அல்லது பக்கவாட்டு சுவர்களிலோ அல்லது ஜன்னலோரத்திலோ புறா, குருவி, அணில் போன்ற உயிரினங்கள் வருகை தந்தால்... அவற்றை ஒருபோதும் விரட்டாதீர். அவை நம் எம்முடைய வீட்டிற்கு நல்ல விடயங்களை கொண்டு வருகிறது எனப் பொருள்.
எம்மில் சிலர் புறாவிற்கு கூடு கட்ட வழிவகை செய்வர். அதேபோல் அணிலுக்கும், சிட்டுக் கருவிக்கும் கூடுகட்ட வழி வகுப்பர். இவையெல்லாம் எம்முடைய முன்னேற்றத்திற்கு சாதகமான சக்திகளை கொண்டு வரும். நீங்கள் அமைத்த கூட்டிற்கு புறா, சிட்டுக்குருவி, அணில் போன்றவை வருகை தந்தால், உங்களை ஆசீர்வதிக்கும் ஆத்மாக்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள் என்று பொருள். இவர்களால் நமக்கு நல்லவை நடப்பதுடன்... அவை ஆயுள் முழுவதும் தொடர்ந்து நீடித்து, எமக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், செல்வ வளத்தையும் எல்லை இல்லாமல் வழங்க கூடியவை. எனவே ஜீவாதார சக்திகளாக திகழ்ந்து, மனிதர்களுக்கு நேர் நிலையான ஆற்றல்களை அள்ளித்தரும் சிறிய உயிரினங்கள் மீது கருணையுடன் நடந்து கொள்வோம். அவை வருவதற்கு வழி மேல் விழி வைத்து காத்திருப்போம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM