புகையிரத சேவை மறுசீரமைப்பு : தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

Published By: Digital Desk 3

24 Jun, 2023 | 02:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத திணைக்களம் இலாபமடைய வேண்டுமாயின் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும், புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்ட கருத்துக்கு புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் போது பொது பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். இலாபமடையும் நோக்கத்துக்காக கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்படும். ஆகவே புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் போது ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு அமையவே புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றார்.

புகையிரத சேவையில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. மானியம் இல்லாத காரணத்தால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே புகையிரத சேவை அதிகார சபையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். 

அத்துடன், புகையிரத சேவை காலத்துக்கு ஏற்றாற் போல் மறுசீரமைக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்ட கருத்துக்கு புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

புகையிரத சேவையை  அதிகார சபையாக மாற்றியமைத்தால் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள். பொது போக்குவரத்து சேவையின் கட்டணம் உயர்வடைந்ததால் பெரும்பாலான பொது பயணிகள் தற்போது புகையிரத சேவையை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான பின்னணியில் புகையிரத சேவையை அதிகார சபையாக்கினால் பொது பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள்.

புகையிரத சேவையை அதிகாரசபையால் மாற்றியமைக்கும் போது பொதுபயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், இழக்கப்படும் வரபிரசாதங்கள் ஆகியன தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் அரசாங்கம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு அமையவே புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது...

2026-01-22 05:27:28
news-image

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப...

2026-01-22 05:14:08
news-image

கடல் அரிப்பால் கிழக்கு மாகாணத்தைப் பாதுகாக்க...

2026-01-22 04:42:37
news-image

சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு...

2026-01-22 04:33:09
news-image

நாடளாவிய ரீதியில் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் பணிபகிஷ்கரப்பு-...

2026-01-22 04:30:48
news-image

7 முஸ்லிம் தலைவர்களை “தேசிய வீரர்கள்”...

2026-01-22 04:26:45
news-image

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ். அரசாங்க...

2026-01-22 04:20:55
news-image

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை...

2026-01-22 04:17:51
news-image

நிட்டம்புவையில் 61 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ...

2026-01-22 04:10:32
news-image

பேரனர்த்தப் பாதிப்புக்களை ஆராய இலங்கை வரும்...

2026-01-22 04:08:36
news-image

அம்பாறையில் கடலரிப்பு தீவிரம்: உடனடி அரச...

2026-01-22 04:01:17
news-image

மலையக மக்களுக்கு சொந்தமாக 10 பேர்ச்...

2026-01-22 03:56:52