2014 இல் எம்ஐஎச்7 பயணிகள் விமானம்( மலேசியன் எயர்லைன்ஸ்) உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.
இரண்டு ரஸ்யபிரஜைகள் ஒரு உக்ரைன் பிரஜைக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது. பயணத்தடைகளையும் அபராதங்களையும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹேக் நீதிமன்றம் தண்டனை வழங்கியவர்களிற்கு எதிராகவே அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.
விமானத்தை வீழ்த்துவதற்கான ஏவுகணைகளை வழங்கிய ரஸ்யாவின் படைப்பிரிவின் அதிகாரி சேர்வே முச்கவேவிற்கு எதிராகவும் அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது. பயணிகள் விமானம்; சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு எதிராக ஏற்கனவே அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டவேளை டொனொட்ஸ்க் மக்கள் குடியரசிற்குள் காணப்பட்ட இரு பிரிவினைவாத தலைவர்கள் இருவரும் ரஸ்ய படையைசேர்ந்த ஒருவரும் உக்ரைனின் இறைமை ஆள்புல ஓருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிற்காக தண்டிக்கப்பட்டனர் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இந்த தடைகள் இந்த விடயத்தில் பொhறுப்புக்கூறலை உறுதி செய்வதில் அவுஸ்திரேலியா உறுதியுடன் உள்ளதை வெளிப்படுத்துகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM