(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் முன்னாள் அமைச்சர் முத்து சிவலிங்கம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மலையக மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசை பலப்படுத்தவும் அவர் அளப்பரிய சேவை செய்துள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லரின் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில்,
முத்து சிவலிங்கம் 1989 ஆம் ஆண்டு மற்றும் 1994 ஆம் ஆண்டு தேர்தல்களின் போது நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு தேர்தலில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பல தடவைகள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் 2020 மார்ச் மாதம் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சர் மற்றும் அமைச்சராகவும் பல தடவைகள் பதவி வகித்துள்ளார்.
தமது அரசியல் பயணத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டுள்ள வெற்றிகளுக்காக தமது உழைப்பையும் வியர்வையையும் அர்ப்பணிப்பையும் அவர் வழங்கியுள்ளார். மலையக மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசை பலப்படுத்தவும் அவர் செய்த சேவை அளப்பரியது என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்,
மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தவர். முத்து சிவலிங்கத்துக்கு செய்யும் உதவியாக மலைய மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதேநேரம் மலையக மக்களின் உரிமையை பாதுகாக்கும் எமது பயணத்துக்கு அன்னாரின் குடும்பத்தினர் எமக்கு பெரும் சக்தியை வழங்கி வருகின்றனர்,
அவரின் இழப்பால் கலையுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM