எம்மில் பலரும் திடீர் தன வரவு வேண்டும் என பல பரிகாரங்களை சிரத்தையுடன் மேற்கொள்கிறார்கள். இதன் காரணமாகவும், அவர்களுடைய கர்ம வினை குறைந்து.., பண பலன் கிடைக்கிறது. ஆனால் அவை மின்னி மறையும் மின்மினி நட்சத்திரங்கள் போல் விரைவாக கரைந்து விடுகிறது.
நாம் மீண்டும் திடீர் தன வரவு வேண்டும் என்பதற்கான பரிகாரங்களை மேற்கொள்ள தொடங்குகிறோம். சிரத்தையாக மேற்கொண்டாலும் முழுமையான பலன் கிடைப்பதில்லை. உடனே நாம் பரிகாரங்கள் பொய் என உரைக்கத் தொடங்கி விடுகிறோம். தன வரவு கிடைத்தவுடன் அந்த தனத்தை தக்க வைத்துக் கொள்வதில்... அதாவது செல்வ வளத்தை குறையாமல் வைத்துக் கொள்வதில்... தீவிர அக்கறையை காட்டாமல், அலட்சியத்துடனும்.... சோம்பேறித்தனத்துடனும் இருந்துவிட்டு.., பிறகு பரிகாரங்களை குறை கூறுகிறோம்.
உடனே எம்மில் சிலர், வந்த செல்வம் திடீரென்று மாயமானது ஏன்? அல்லது வரத் தொடங்கிய கொஞ்ச நாட்களில் வரவை விட செலவு அதிகமானது ஏன்? எனக் கேட்பர். இதற்கான சூட்சுமத்தை எம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள் பின்வருமாறு பட்டியலிடுகிறார்கள்.

தன வரவு அதிகரித்தவுடன் மனதில் மகிழ்ச்சி பொங்கி, நாளாந்த கடமைகளில் பலவற்றை முறையாக செய்ய தவறுகிறோம். குறிப்பாக எம்முடைய சமையலறையில் காலையிலிருந்து இரவு வரை பசியாறிய பின் சமைத்த பாத்திரங்களையும், அதற்காக பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தாமல்.., மறுநாள் காலை வரை அசுத்தத்துடன் வைத்திருக்கிறோம்.
மேலும் சில வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல்.. சூழல் காரணமாக ஆண்கள் விளக்கேற்றுவார்கள்.
பிறகு பெண்கள் பணிக்கு சென்று திரும்பி அதாவது சூரியன் மறைந்த பிறகு, வீட்டை பெருக்கி, துடைத்து, சுத்தப்படுத்துவார்கள். இது பெரும் தவறு.
சமையலறையில் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களை வரவேற்பறை, படிப்பறை, படுக்கையறை.... ஆகியவற்றில் அமர்ந்தபடியே பசியாறிவிட்டு, அந்த எச்சில் தட்டுகளை அங்கேயே வைத்து விடுவது. இதுவும் மாபெரும் தவறு.
பெண்களுக்கென வரையறை செய்து சொல்லப்பட்டிருக்கும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிழமைகளை தவிர்த்து வேறு கிழமைகளில் தலை குளித்தாலும் தவறுதான். அதேபோல் ஆண்களும் புதன், சனி ஆகிய இரண்டு கிழமைகளை தவிர்த்து, வேறு கிழமைகளில் தலை குளித்தாலும் தவறுதான்.
சமையலறையில் உப்பு, பால், சர்க்கரை, அரிசி... ஆகிய அத்தியாவசிய பொருட்கள் தீரும் வரை புதியவற்றை வாங்காமல் இருந்தாலும் தவறுதான்.
மின்சார கட்டணம் உயர்ந்தாலும் வீட்டிற்கு குறைந்தபட்ச வெளிச்சம் என்பது இருக்க வேண்டும். மின்சார சிக்கனம் என்ற பெயரில் வீட்டை அல்லது வீட்டின் ஒரு பகுதியை இருளில் வைத்திருப்பதும் தவறுதான்.
ஓய்வு நேரங்களிலோ அல்லது ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைத்த நேரங்களில் அல்லாமல் வேறு நேரத்திலோ சுபமான மெல்லிசையை கேட்காமல்... அசுப இசையை கேட்பதும் தவறு தான்.
பண வரவு அதிகமானவுடன் நாளாந்த வீட்டுக் கடமைகளை செய்ய பணியாட்களை நியமித்து, அவர்களைக் கொண்டு படுக்கை அறை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்வது மகா தவறு.
உங்களுடைய வீட்டு வாசலில் பிரத்யேக இடம் ஒதுக்கி காலணிகளையும், துடைப்பத்தையும் நேர்த்தியாக வைத்து பராமரிக்காமல்... அலங்கோலமாக வைத்திருந்தாலும் தவறுதான்.
துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் அல்லது அதற்குரிய பிரத்யேக பிளாஸ்ரிக் வாளியில் மூன்று மணி தியாலத்திற்கும் மேலாக ஈரத் துணிகளை வைத்திருப்பதும்... தேவைக்கு அதிகமான துணிகளை வைத்திருப்பதும் தவறுதான்.
வீட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒட்டடை எனப்படும் சிலந்தி வலை இருப்பதும் மாபெரும் தவறு தான்.
சமையலறை, கழிவறை, வரவேற்பு அறையில் இருக்கும் குழாய்களில் நீர் முழுமையாக நிறுத்தப்படாமல், சொட்டு சொட்டாக கசிந்தாலும், சுவர் பகுதிகளில் மழைக்காலங்களை தவிர்த்து வேற பருவ காலங்களில் ஈரமாக இருப்பதும் தவறுதான்.
உங்களுடைய உரையாடலில் 'இல்லை', 'வராது', 'வேண்டாம்', 'கடன்', 'பிரச்சினை' போன்ற வார்த்தைகளை அதிகம் உபயோகித்தாலும் தவறுதான்.
மேற்கண்ட தவறுகளை நீங்கள் செய்தாலோ... செய்து கொண்டிருந்தாலோ... உங்களிடமிருந்து தன வரவு குறையத் தொடங்கும். செல்வ வளம் கரையத் தொடங்கும். இதனை தவிர்க்க வேண்டுமென்றால் மேற்கூறிய தவறுகளை செய்யாமல்.. நல்ல விடயங்களை தொடர்ந்து செய்தால் செல்வ வளம் குறையாது.
தொகுப்பு : சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM