அம்பிட்டியே சுமணரத்தின தேரரின் வழக்கு ஒத்திவைப்பு

Published By: Priyatharshan

26 Jan, 2017 | 09:23 AM
image

அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி. பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே  29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் இனத்துவேஷ பேச்சுகளை பேசியதாகக் கூறி, அம்பிட்டியே சுமணரத்தின தேரருக்கு எதிராகவும் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின்  உப தலைவர் வி. பூபாலராஜாவுக்கு எதிராகவும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

இது தொடர்பான வழக்கு நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37