அரச நிவாரண வழங்கல் தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா என்பதில் சந்தேகம் - ரோஹித அபேகுணவர்தன

Published By: Vishnu

23 Jun, 2023 | 01:41 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நிவாரணம் பெற்றுக் கொள்ள தகுதிடையவர்கள் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே நிவாரண பயனாளர்கள் தெரிவு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து  உரையாற்றியதாவது

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

அரச நிவாரண வழங்கல் உண்மையில் தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது.

அஸ்வெசும நிவாரண திட்டத்தில் நீரழிவு நோயாளர்கள்,விசேட தேவையுடையவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

செல்வந்த தரப்பினர் நிவாரண திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளர்கள். ஆகவே இந்த செயற்திட்டம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு  முறையாக நிவாரணம் வழங்காவிட்டால் ஏழ்மை நிலை தீவிரமடையும்.

ஆகவே அஸ்வெசும செயற்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:16:13
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18