திறமையை வெளிப்படுத்திவரும் இலங்கையை நம்பிக்கைமிக்க ஓமான் சந்திக்வுள்ளது

23 Jun, 2023 | 06:15 AM
image

(நெவில் அன்தனி)

ஓமானுக்கு எதிராக புலவாயோவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பி குழுவுக்கான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்று சுப்பர் 6 சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள இலங்கை கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை ஈட்டிய ஓமான், இலங்கையுடனான போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

ஓமான் அணிக்கு இலங்கையின் இரண்டாவது டெஸ்ட் அணித் தலைவர் டுலீப் மெண்டிஸ் பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்த இரண்டு அணிகளும் சந்திக்கவுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

தனது ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக 6 விக்கெட்களை இழந்து 355 ஓட்டங்களைக் குவித்து 175 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, இரண்டாவது போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது  

அப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, கசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய நால்வரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகியோரும் துடுப்பாட்டத்தில் அதிரடிகளைப் பிரயோகித்திருந்தனர்.

அதேவேளை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்த வனிந்து ஹசரங்க எதிரணிக்கு இம்சை கொடுப்பார் என நம்பப்படுகிறது.

இந்தப் போட்டியில் ஓமான் எதிர்பாராத வெற்றியை ஈட்டினால் அது தசுன் ஷானக்கவின் தலைமையிலான இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இதன் காரணமாக இலங்கை அழுதத்தை எதிர்நோக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே தனது ஆரம்பப் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இலங்கை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அணியில் மாற்றம் இடம்பெறுவதாக இருந்தால் வேகப்பந்துவீச்சில் மாத்திரமே மாற்றம் ஏற்படும். துஷ்மன்த சமீர பூரண உடற்தகுதியைக் கொண்டிருந்தால் கசுன் ராஜித்த அல்லது லஹிரு குமார அவருக்கு வழிவிடுவார். ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை.

மறுபுறத்தில் ஓமான் தமது அணியில் மாற்றமின்றி இந்தப் போட்டியை எதிர்கொள்ளும் என நம்பப்படுகிறது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த / லஹிரு குமார / துஷ்மன்த சமீர.

ஓமான்: காஷியப் ப்ரஜாபதி, ஜட்டிந்தர் சிங், ஆக்கிப் இலியாஸ், ஸீஷான் மக்சூத் (தலைவர்), மொஹமத் நடீம், அயான் கான், ஷொயெப் கான், நசீம் குஷி, ஜெய் ஒடேத்ரா, பயாஸ் பட், பிலால் கான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37