தற்கொலை தாக்குதலுக்காக பச்சிளம் குழந்தைகளை பயன்படுத்தும் அவலம் நைஜீரிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படுகிறது.

நைஜீரியாவிலுள்ள போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு அரச படையினருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்திற்காக அதிகளவான தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த தாக்குதல்களை சூட்சுமமாக மேற்கொள்வதற்காக அந்நாட்டு பெண் தீவிரவாத போராளிகள் சந்தேகத்தை ஏற்படுத்தாதிருக்க தங்கள் கைகளில் பச்சிளம் குழந்தைகளை ஏந்திவரும் பழக்கத்தை தொடங்கியுள்ளனர்.

அண்மையில் நைஜீரியாவின் மடகாலி நகரத்திலுள்ள சோதனை சாவடிக்கருகில் இரண்டு பெண்கள் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி வந்தநிலையில் தங்களை வெடிக்கச்செய்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்தால் குழந்தைகள் உட்பட சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

போகோ ஹராம் தீவிரவாதிகள், நைஜீரியா அரச தரப்பின் மீது தாக்குதல் மேற்கொண்டு தங்களது நிலப்பகுதிகளை கையகபடுத்தும் முயற்சிகளை மும்முரமாக செய்துவருகின்றனர்.

ஹராம் அமைப்பை சேர்ந்த இளம் பெண்கள் தமது தாக்குதல்  இலக்கை அடைவதற்காக, பச்சிளம் குழந்தைகளை சுமந்து செல்வதை சந்தேகிக்க முடியாத தற்கொலை தாக்குதல் உக்தியாக பயன்படுத்துகின்றனர். 

குறித்த நகர பகுதியில் கடந்த வருடத்தின் இறுதிபகுதி மற்றும் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதிகளில் தற்கொலை தாக்குதல்கள் மூலம் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.