(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தோட்டத்துறையில் உள்ள அரச தோட்டக் காணிகள் எந்தவித திட்டமிமலும் இல்லாமல் துண்டுப்போட்டு விற்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களின் பணிக்கொடை போன்ற கொடுப்பனவு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை, இவ்வாறான நிலையில் இந்த நாடு ஜனாதிபதி எதிர்பார்க்கும் 2028இல் எவ்வாறு அபிவிருத்தியடையும் என எதிர்பார்க்க முடியும் என கேட்கிறோம் என எதிர்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கம் தொழில்சார் நிலையில் உள்ளவர்களுக்கு வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் விளைவாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உட்பட துறைசார் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக அனைத்து துறைகளிலும் தொழில்சார் வல்லுநர்களின் குறைபாட்டை காண்கிறோம்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் இலக்கான 2048இல் இலங்கை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற முடியும்.
அதேபோன்று இன்று டொலரின் பெறுமதி ஒவ்வாெரு நாளும் மாற்றமடைகிறது. அதனை ஒரு நிலையாக வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் உற்பத்தி துறையில் இருப்பவர்கள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு ஒரு நிலையான விலையை நிர்ணயிக்க முடியாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறான நிலையில் எவ்வாறு இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றப்போகிறது.
அத்துடன் தோட்டத்துறையில் உள்ள அரச தோட்டங்களை பார்க்கும்போது, எந்தவித திட்டமிமலும் இல்லாமல் தோட்டக்காணிகள் துண்டுப்போட்டு விற்கப்படுகின்ற, குத்தகைக்கு வழங்கப்படுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் அங்கிருக்கின்ற தொழிலாளர்கள் ஓய்வுபெற்றவர்களின் பணிக்கொடை, ஈபி.எப். ஈடிஎப், கொடுப்பனவு போன்ற பிரச்சினைகளை தீரப்பதற்கு எந்த வழிமுறையையும் அரசாங்கம் எடுப்பதை காணக்கூடியதாக இல்லை. இவ்வாறான நிலையில் இந்த நாடு எவ்வாறு அபிவிருத்தியடையும் என்ற கேள்வியை நாங்கள் அரசாங்கத்திடம் கேடகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM