பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள், நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தலைமையில் விசேட கலந்துரையாடல் 

22 Jun, 2023 | 09:10 PM
image

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல்மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு சபை அதிகாரிகள், கொழும்பு துறைமுக நகர் ஆணையாளர், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் உட்பட துறைசார் அதிகாரிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 'போர்ட்சிட்டி'க்கு நீர் வழங்கலின்போது முழுமையாக டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

"நீர்வழங்கல் அதிகார சபை கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், அதனை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதே எனது இலக்கு. அதற்கேற்ற வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, துறைமுக அபிவிருத்தி நகருக்கு நீர் வழங்கலின்போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக திட்டம் வகுக்கப்படுகிறது" என இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதனையடுத்து நீர்வழங்கல் அமைச்சும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சும் இணைந்து ஒரு குழுவை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21
news-image

அரசாங்கத்தின் செயல்கள் ,வாக்குறுதிகள் நிறைவேற்றாமையை கண்டித்து...

2026-09-12 14:50:18