இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அ ணித்தலைவரான மகேந்திரசிங் டோனிக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது  வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தால் பத்ம பூஷண், பத்மவிபூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது டோனிக்கும், பத்ம ஸ்ரீ விருது தற்போதைய இந்திய கிரக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.