ஜாதகமே இல்லாதவர்கள் வெற்றி பெறுவதற்கான பரிகாரங்கள்...!

Published By: Ponmalar

22 Jun, 2023 | 03:57 PM
image

எம்மில் சிலர் இன்றும் கூட எமக்கு ஜாதகம் இல்லை என்பர். இன்னும் சிலர் எமக்கு பிறந்த திகதியும், தருணமும், இடமும் தெளிவாக... உறுதியாக... தெரியாது என்பர்.

வேறு சிலர் ஜாதகம் இருந்தது. இயற்கை பேரிடர் காரணமாக அது தொலைந்து விட்டது. மேலும் அது தொடர்பாக எந்த நினைவும் இல்லை என்பர்.

வேறு சிலர் எம்முடைய ஜாதகம் குழப்பமாக இருக்கிறது. அதனால் அதனைப் பின்பற்றுவதில்லை என்பர். வேறு சிலர் ஜாதகம் பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்பர்.

இப்படி கூறினாலும் இவர்களும் அவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப வாழ்க்கையில் சிரமங்களையும், நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் எதிர்கொள்கிறார்கள். இவர்கள் தடைகளிலிருந்து விலகி வெற்றிப் பாதையை நோக்கி பயணிப்பதற்கு.. சில எளிய பரிகாரங்களை எம்முடைய சோதிட வல்லுனர்களும், ஆன்மீக வழிகாட்டிகளும் முன்மொழிந்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே காண்போம்.

ஆண், பெண் என எந்த பாலினத்தவராக இருந்தாலும் ஜாதகம் இல்லை என்றால் நாளாந்தம் காகத்திற்கு உணவிட வேண்டும். குறிப்பாக தயிர் சாதத்தை உணவிட அளிப்பது சிறந்தது. காகங்களுக்கு மட்டுமல்லாமல் புறா, கிளி போன்ற வேறு சில பறவைகளுக்கு தானியங்களையும், குடிநீரையும் தாருங்கள்.

பசுவிற்கு துவாதசி திதி இருக்கும் நாள்களில் புல் அல்லது அகத்திக்கீரை அல்லது வாழைப்பழத்தை வாங்கித் தாருங்கள். இதனை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

நாய்களுக்கு பிஸ்கட், மீன்களுக்கு பொரி, எறும்புகளுக்கு அரிசி மா, குரங்குகளுக்கு அச்சு வெல்லம், வாழைப்பழம், வேர்க்கடலை ஆகியவற்றை வழங்க வேண்டும். இதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பின்பற்ற வேண்டும்.

உங்களது வசிப்பிடங்களுக்கு அருகே அரச மரம், வேப்பமரம், வன்னி மரம், நெல்லிக்காய் மரம் ஆகிய மரங்கள் இருந்தால், இவற்றுக்கு அதிகாலை ஆறு மணிக்குள் ஒரு குடம் தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

அருகிலுள்ள ஆலயங்களில் அகண்ட தீபம் அல்லது தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணையை வாங்கி தாருங்கள்.

சனிக்கிழமைகளில் காலையிலிருந்து மாலை வரை நீங்கள் சந்திக்கும் மூன்றிலிருந்து ஐந்து ஊனமுற்றவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையிலோ அல்லது நீங்கள் விரும்பும் வகையிலோ ஆடைகளை தானமாக வழங்குங்கள்.

நீங்கள் உணவகங்களுக்கு பசியாறச் செல்லும்போது, ஏழை எளியவர்களுக்கு, குறைந்தபட்சம் ஒருவருக்காவது வயிறார உணவளியுங்கள். நீங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர் என்றால், யாரேனும் அன்னதானம் வழங்குகிறோம் நிதி உதவி தாருங்கள் என கேட்டால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதே தருணத்தில் வேறு சிலர் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போன்றவை அமைக்கவிருக்கிறோம் உதவுங்கள் எனக் கேட்டால், அவர்களுக்கும் நீங்கள் தாராளமாக நிதி உதவி அளிக்கலாம்.

இவற்றையெல்லாம் விட மிக சிறந்த எளிய பரிகாரம்.. காலையில் சூரிய உதய தருணத்தை தெரிந்து கொண்டு அதன் போது சூரிய பகவானை வழிபடுங்கள். 

இத்தகைய எளிய பரிகாரங்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் ஜாதகம் இல்லை என்றாலும், உங்களின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32
news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37